புதுச்சேரி சுகாதார துறை அலுவலகம் முன்பு பணி வழங்க வலியுறுத்தி வாரிசுதாரர்கள் குடும்பத்துடன் காத்திருக்கும் போராட்டம்..
புதுச்சேரி சுகாதார துறையில் பணியின் போது இறந்த வாரிசுகளுக்கு வேலை கேட்டு வாரிசுகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றனர்.
அவர்களுக்கு தளர்வு அளித்து வேலை வழங்க முதல் அமைச்சர் உத்தரவிட்டும் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனை கண்டித்து வேலைவாய்ப்பு வழங்க கோரி சுகாதார துறை இயக்குனர் அலுவலக வாயிற்படியில் கைக்குழந்தைகளுடன் வாரிசுதாரர்கள் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
No comments